கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

புரெவி  சூறாவளியானது வலுவிழந்து தாழமுக்கமாக இந்தியாவின் தென்பகுதி கரையை அடைந்துள்ளது.

எனினும் இதன் தாக்கம் தொடர்ந்து காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.