கோறளைப்பற்று மத்தியில் 108 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 108 நபர்களுக்கு இன்று(04) பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் வாழைச்சேனை முகைதீன் ஜீம்ஆ பள்ளிவாயல் முன்பாக பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.
இதன்போது மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், பழங்கள் வியாபாரிகள், இறைச்சி வியாபாரிகள், சில்லறைக்கடை வியாபாரிகள், பொருட்கள் கொள்வனவு செய்து வந்த வியாபாரிகள் ஆகியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.