இரண்டு பகுதிகளில் போக்குவரத்து கட்டுபாடு

இரண்டு பகுதிகளில் போக்குவரத்து கட்டுபாடு

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட சுகாதார பரிசோதகர் பிரிவுகள் இரண்டில் போக்குவரத்து கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட்டவல சுகாதார பரிசோதகர் பிரிவின் வெலிஒய தடகெலே கீழ் பிரிவு மற்றும் கினிகத்ஹேன சுகாதார பரிசோதகர் பிரிவின் கெனில்வர்த் தோட்டம் பிளக்வோடர் கீழ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு மீள அறிவிக்கும் வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.