பிரித்தானிய பிரதமர் அடுத்தாண்டு இந்தியா விஜயம்

பிரித்தானிய பிரதமர் அடுத்தாண்டு இந்தியா விஜயம்

பிரித்தானியாவின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி இந்தியாவின் குடியரசு தினம் வருகிறது.

அதில் பிரதம அதிதியாக கலந்துக் கொள்ளுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பொரிஸ் ஜொன்சனுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.