
உடன் தனிமைப்படுத்துங்கள் -விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாண்டியாவை உடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்குமாறு வடமேற்கு மாகாண ஆளுநர் ராஜா கொலூரே சுகாதார அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
இறால் வளர்ப்பு காரணமாக குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகமாக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
நாத்தாண்டியாவில் உள்ள ஒரு இறால் பண்ணையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 48 தொழிலாளர்கள் கொரோனா தொறறுக்கு உள்ளானமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு ஆளுநர் கொலூரே, கோவிட் 19 அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் சிலாபம், வென்னப்புவ மற்றும் நாத்தாண்டியாவை தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.