இலங்கையில் வளி மாசடைவு குறைவடைந்துள்ளது..!
இலங்கையில் வளி மாசடைவு குறைந்த மட்டத்தில் உள்ளமையை, அமெரிக்காவின் சர்வதேச வளித்தரக்குறியீட்டு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
உலகில் அதிகளவில் வளி மாசடைந்துள்ள நகரமாக, பாகிஸ்தானின் கலாசார தலைநகராக கருதப்படும் லாகூர் நகரம் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வளித்தரக் குறியீட்டின்படி, லாகூரில் வளி மாசடைவு செறிமானம் 423 புள்ளியாக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானின் நிதி நகரமான கராச்சி, இந்தப் பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளது.
உலகில் வளி மாசடைவதில் இரண்டாம் இடத்தில் இந்திய தலைநகர் புதுடில்லி பதிவாகியுள்ளது.
புதுடில்லியில் வளி மாசடைவு செறிமானம் 229 புள்ளியாக பதிவாகியுள்ளது.
3 ஆம் இடத்தில் பதிவாகியுள்ள நேபாள தலைநகர் காத்மண்டுவில் வளி மாசடைவு செறிமானம் 178 புள்ளியாக பதிவாகியுள்ளது.
இந்த தரக்குறியீட்டில், உலகில் அதிகளவில் வளி மாசடைந்துள்ள 95 நகரங்களுக்குள் இலங்கையின் நகரம் எதுவும் பதிவாகிவில்லை.
கடந்த ஆண்டு இந்த தரக்குறியீட்டில், கொழும்பு நகரம் 612 ஆவது இடத்தில் பதிவாகியது.