கடற்றொழிலில் ஈடுப்பட வேண்டாம்..! வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

கடற்றொழிலில் ஈடுப்பட வேண்டாம்..! வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

மறு அறிவித்தல் வரும் வரையில் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் கடல்சார் மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது

குறித்த கடற்பகுதிகளில் வளிமண்டலவியல் அமுக்கம் குறைவாக காணப்படுவதால் கடல்சார் மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் மழையுடனாக வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.