கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

நாட்டில் நேற்றைய தினம் பதிவான 496 கொவிட்-19 நோயாளர்களில், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது

அந்த வகையில் 167 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 56 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 53 பேரும், பதிவாகியுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 23 ஆயிரத்து 484 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 17 ஆயிரத்து 2 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 366 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.