இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

வவுனியா தொடருந்து நிலைய வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தொடருந்து நிலைய வீதியில் இருந்து குருமன்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன், எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் படு காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • IMG 20201130 WA0002