முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

திவிநெகும வழக்கில் இருந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேர் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நிரபராதிகள் என கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2 ஆயிரத்து 292 மில்லியன் ரூபாவினை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு நிவாரணத்தை வழங்கியதன் மூலம் அரச பணத்தை முறையற்ற வகையில் கையகப்படுத்தியதாக பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இதன்படி முன்னாள் அமைச்சரான பெசில் ராஜபக்ஷ திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக, அந்த திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று அறிவித்து விடுவிக்கப்பட்டனர்.