
கண்டி - திகனவில் நேற்றைய தினமும் நில அதிர்வு...!
கண்டி - திகன - அம்பகோட்டை பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.45 அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்பணியகத்திடம் வினவிய போது.
இதற்கு பதிலளித்த அந்த பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல, திகன பகுதியில் உணரப்பட்டுள்ள நில அதிர்வு ரிக்கட் 2 இற்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை கண்டி மாவட்டத்திற்குள் கடந்த இரு மாதங்களில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் ஆராய்ச்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழு நேற்றைய தினம் உணரப்பட்டுள்ள நில அதிர்வு தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொள்வதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல கூறினார்.