திடீரென ஏற்பட்ட வலியால் உயிரிழந்த சிறுவன்!
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பதியைச் சேர்ந்த அஜீஸ் அஜ்மி(13) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரிய வருகையில், சிறுவனுக்கு உடலில் வலி ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போதே சிறுவன் உயிரிழந்த நிலையில் இருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் சிறுவனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சிலமணி நேரம் வைத்தியசாலையில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.