வழமைக்கு திரும்பிய இலங்கை போக்குவரத்து சபைக்குறிய பயணிகள் பேரூந்து சேவை

வழமைக்கு திரும்பிய இலங்கை போக்குவரத்து சபைக்குறிய பயணிகள் பேரூந்து சேவை

இலங்கை போக்குவரத்து சபைக்குறிய பயணிகள் பேரூந்து சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

மட்டக்குளி,புறக்கோட்டை, நீர்கொழும்பு,றாகம மற்றும் கொழும்பு கரையோர பகுதிகள் ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பகுதிகளுக்கான பேரூந்து பயணிகள் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதா என   இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரிடம் வினவிய போது.

இதற்கு பதிலளித்த அவர் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பயணிகள் பேரூந்து சேவை ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும், தனியார் பேரூந்து சேவைகள் அதிகம் இடம்பெறாத பகுதிகளுக்கு மேலதிக பேரூந்து சேவைகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ அல்லது இறக்குவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பின்பற்றியே போக்குவரத்து சேவைகளும் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.