மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற பொழுது நேற்று மாலை இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

அத்துடன், பதற்ற நிலை காரணமாக மஹர சிறைச்சாலையில் தீப்பரவலும் ஏற்பட்டதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிடடிருந்தது.