வீடுகளில் உயிரிழப்பதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு-சவேந்திர சில்வா
வீடுகளில் உயிரிழப்பதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் வீடுகளில் உயிரிழப்பதனை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வைத்தியர்கள் சிலரை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சில் உள்ள வைத்தியர்கள் சிலரை நடமாடும் வைத்திய குழுவாக பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகினார், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் உள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தொடர்ந்து அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்