அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தொகுதியானது மேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அது அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் வானிலையில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலோர பகுதிகளில் காற்றின் வேகமானது அதிகரிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.