விசாரணைகளில் தாமதம்- ETI வைப்பாளர்களின் கண்டனம்
ஈ.ரீ.ஐ. நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு, ஈ.ரீ.ஐ. வைப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய குறித்த வைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அனுஷா ஜயந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு, எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தாங்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.