தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபப் பெண் மரணம்- ஹட்டனில் சம்பவம்

தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபப் பெண் மரணம்- ஹட்டனில் சம்பவம்

ஹட்டன் - டன்பார் பகுதியில் சுயதனிமையிலிருந்த 84 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இன்று மாலை உயிரிழந்தார்.

இவரின் பேரப்பிள்ளை கொழும்பு பம்பலபிட்டி பகுதியிலிருந்து வருகைத்தந்திருந்த நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்

இந்நிலையில் இன்று மாலை குறித்த வயோதிப பெண் திடீரென உயிரிழந்ததாக, பொது சுகாதார பிரிவு அதிகாரி பி. காமதேவன் தெரிவித்தார்.

அவரது சடலத்துக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், இன்னும் அதன் பெறுபேறு கிடைக்கப்பெறவில்லை.

அதேநேரம், பொகவந்தலாவை - கெம்பியன் பகுதியில் பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஓரவர் உயிரிழந்தார்.

69 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவரது மகளும், மருமகனும் பத்தரமுல்லை பகுதியில் இருந்து அவரது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவரின் உடலுக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், இன்னும் அதன் பெறுபேறு கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை, நமுனுகல - கனவரெல்ல  13 ஆம் கட்டை பகுதியில் நாளை தினமும் மேலும் சிலருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவுசாகலை பொது சுகாதார பரிசோதகர் வீ.ராஜதுரை இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் கனவரெல்ல 13ஆம் கட்டை பகுதியில் தொற்றுறுதியான இளைஞர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.