மஹர சிறைச்சாலை விவகாரம்- விசாரணைகளுக்காக விசேட குழு நியமனம்

மஹர சிறைச்சாலை விவகாரம்- விசாரணைகளுக்காக விசேட குழு நியமனம்

மஹர சிறையில் இன்று இடம்பெற்ற பதட்டநிலைமை தொடர்பான விசாரணைக்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதும் சிறையில் பதட்டநிலைமை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் ஏற்பட்ட பதட்டநிலைமையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உப்புல்தெனிய   தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சிறைச்சாலைக் கட்டிடத்தில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.