உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட பல வீதிகளை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட பல வீதிகளை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட பகுதிகளில் 341 வீதிகளை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியானமையை முன்னிட்டு இந்த வீதி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த திட்டத்தின் ஆரம்ப வைபவம், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் தலைமையில் ஜா-எல கந்தானை பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

சுபீட்சமான நோக்கு கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் நான்கு வருடங்களில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட பகுதிகளில் வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.