மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் இந்தியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன
சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்களை இந்தியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணத்தை அறவிட்ட பின்னர், குறித்த மஞ்சள் தொகையை திருப்பியனுப்ப தீர்மானித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்டுள்ள கொள்கலன்களில் 10 இலட்சம் கிலோகிராமிற்கும் அதிக மஞ்சள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி சுமார் 700 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
மஞ்சளை நாட்டிற்கு கொண்டுவர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் சுங்கத்தால் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்டுள்ள 30 தொன் மஞ்சளில் 10 தொன் மஞ்சள் நிதியமைச்சினூடாக இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.