நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் காணப்படுகின்ற தாழமுக்க பிரதேசம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கயை மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி நிலவக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காங்கேசன்துறை முதல் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசம் கொத்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மீள் அறிவித்தல் வரையில் கிழக்கு கடலின் ஆழமான பகுதிகளுக்கு கடல் சார் நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.