நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் நேற்றைய தினம் பதிவான 487 கொவிட்-19 நோயாளர்களில், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
223 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 78 பேரும், கண்டிமாவட்டத்தில் 15 பேரும், பதிவாகியுள்ளனர்.
இன்று காலை வரையான நிலவரப்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தைக் கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 3 ஆயிரத்து 59 பேர் மினுவாங்கொடை கொத்தணியிலும், 16 ஆயிரத்து 388 பேர் பேலியகொடை, கொத்தணியிலும் பதிவாகியுள்ளனர்.
இந்த இரண்டு கொத்தணிகளிலும் 13 ஆயிரத்து 223 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நாள் வரையில் 22 ஆயிரத்து 988 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
430 நேற்று குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.
6 ஆயிரத்து 225 பேர் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இன்று காலை வரையில் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 53 தனிமைப்படுத்தல் மையங்களில் 5 ஆயிரத்து 279 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய நாளில் 11 ஆயிரத்து 936 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நமுனுகுல - கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 60 க்கும் மேற்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 26 வயதுடைய ஒருவருக்கே புதிதாக கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து அங்கு சென்ற ஒருவருக்கு கடந்த 21 ஆம் திகதி முதலாவதாக தொற்றுறுதியானது.
ஏனையோர் அவருடன் தொடர்புடையோர் என பசறை பொதுசுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.
இதன்படி நமுனுகுல - கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் அந்த பகுதியில் 103 குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர் நகுலேஸ்வரன் தெரிவித்தார்.