இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்
வவுனியா பழைய பேருந்து நிலையம் கடந்த சில தினங்களாக இருளில் மூழ்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் பேருந்து நிலையத்தை சூழவுள்ள வர்த்தக நிலையங்களும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைப்பணம் செலுத்தப்படாததால் மின்துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் மின்மானியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்மாற்றியும் சேதமடைந்துள்ளது .
இதனால் பேருந்து நிலையத்திற்கான மின்சாரத்தினை உடனடியாக சீமைத்துத்தருமாறு அப்பகுதி வர்த்தகர்கள் கோருகின்றனர்.