ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது...!

ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது...!

ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ரக போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்த தகவலை அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் கல்கிசை மற்றும் பேலியகொடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.