யாழ் நல்லூரில் மற்றுமொரு ஆதீனம்
யாழ். நல்லை மண்ணில் இன்று புதியதோர் ஆதீனம் உதயமாகியுள்ளது.
திருக்கார்த்திகை திருநாளில் (29) காலை 10 மணியளவில் நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கப்பட்டு நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகளின் குருபீடமாக உதயமாகும் ஆதீனத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.
ஞானத்தைப் போதிக்கும் மடமாகவும், தமிழே அறிவாகவும், அரனே வடிவாகவும் உதயமான ஆதீனமானது, அண்ணாமலையான் சோதி வடிவமாக காட்சி தரும் நன்நாளில் எங்கள் நிலமெங்கும் ஆன்மீக ஒளித்திரளாய் அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026