பொலிஸ் அதிகாரியை மீது டிப்பர் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற சாரதி!

பொலிஸ் அதிகாரியை மீது டிப்பர் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற சாரதி!

நிகவெரடிய, கொபெய்கனே பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகளுக்கு இடையில் டிபர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வு சுற்றிவளைப்பு ஒன்றிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் வாகனமொன்றை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்த போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை டிப்பர் வாகனத்தின் சாரதி இவ்வாறு மோதி சென்றுள்ளார்.

இதன்போது கொபெய்கனே பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 32 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.