கோட்டாபயவின் உத்தரவு -வெளிப்படுத்திய இராணுவத் தளபதி

கோட்டாபயவின் உத்தரவு -வெளிப்படுத்திய இராணுவத் தளபதி

இலங்கையில் அண்மைய நாட்களாக தை்தியசாலைகளில் மட்டுமல்லாது வீடுகளில் தனிமைப்படுத்தபடுபவர்களும் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டினுள் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காயலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களை இனங்காண நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.