தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளையுடன் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை, கொழும்பு கரையோரம் என்பனவும், கம்பஹா மாவட்டத்தின் இராகமை, நீர்கொழும்பு என்பனவும் நாளை காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மட்டக்குளியில் உள்ள ரந்திய உயன, ஃபேர்கசன் வீதியின் தெற்கு பகுதி என்பனவும், வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன தொடர்குடியிருப்பு, சாலமுல்ல, விஜயபுர என்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக தொடர்ந்தும் பேணப்படவுள்ளன.