கணவனுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் கருச்சிதைவுக்கு உள்ளான கர்ப்பிணி மனைவி
மீன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த களனி-பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியானதைத் தொடர்ந்து, அவர் மட்டக்களப்பில் உள்ள கொவிட் 19 சிகிச்சை மையம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரது கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்காக தியதலாவை பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், பயணச் சோர்வு உள்ளிட்ட பல காரணங்களினால் குறித்த கர்ப்பிணிப் பெண் கருச்சிதைவுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.