பிரதமரை - மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் இடையே சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சரான மரியா திதி (Mariya Didi) உள்ளிட்ட தூதுக்குழுவினர், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளனர்.
விஜயராமையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள், பாதாள உலக குழு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை ஒழித்தல், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.