பேலியகொடை மீன் சந்தை மீள திறக்கப்படவுள்ளது

பேலியகொடை மீன் சந்தை மீள திறக்கப்படவுள்ளது

பேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மீன் சந்தையை விரைவாக மீள திறக்கும் முகமாக, சுகாதார துறையினரால் அங்கு இன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

சுகாதார துறையினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீன் விற்பனையாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் பேலியகொடை மீன் சந்தை மீள திறக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், மொத்த விற்பனையாளர்கள் மாத்திரம் செல்வதற்கே அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.