இன்று மாலை அல்லது நாளை காலை முடிவு வெளியிடப்படும் - இராணுவத் தளபதி
கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கின் எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை முடிவு வெளியிடப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று (28) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்.
இந்த வாரம் முழுவதும் செய்யப்பட்ட பகுப்பாய்வு மற்றும் இன்று மேற்கொள்ளப்பட்ட முழு பகுப்பாய்வுகளின் படி, வரும் திங்கள் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்கு இன்று மாலை அல்லது நாளை காலை தெரிவிக்கப்படும்.
அடுத்த வாரம் முடிந்தவரை தேவையான பகுதியை மட்டும் தனிமைப்படுத்த முயற்சிப்போம்.
இது ஒரு வீதியாக இருக்கலாம். ஒரு குடியிருப்பாக இருக்கலாம். ஒரு கிராமத்தின் ஒரு பகுதியாகவும் இருக்க முடியும்.
272பேர் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த 272 யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களை அடிபபடையாக கொண்டு ஒரு வரைபடத்தை எடுத்து பார்க்கிறோம். அதுதான் செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்று ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.