தபால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய தகவல்!

தபால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய தகவல்!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தயாராக உள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ இதனை கூறியுள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரச அல்லது தனியார் நிறுவனங்கள் தபால் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் இதனை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், குருணாகலை மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள தபால் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.