கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் தற்போது 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

அதேபோன்று, கொழும்பு நகரில் சுமார் 08 குடியிருப்பு தொகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆகவே, கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்காக மீண்டும் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.