க.பொ.த சாதாரண பரீட்சை நடத்தப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

க.பொ.த சாதாரண பரீட்சை நடத்தப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பதை தவிர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டபடி பரீட்சை நடத்தப்படுமா என்பது குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் எட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளறார்.

நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளில் 5 ஆயிரத்து 100 பாடசாலைகள் மட்டுமே நவம்பர் 23ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டனஎன்றும் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கொரோனா வைரஸ் மற்றும் அது தொடர்பான அச்சத்தை கருத்தில் கொண்டு நாட்டின் சில பகுதிகளில் பாடசாலைகளை அதிகாரிகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,

குறிப்பாக இந்த நிலைமை தொடர்ந்தால் இந்த நிலையை கருத்தில் கொண்டு தீர்க்கமான முடிவு அடுத்த வாரம் எட்டப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.