மட்டக்களப்பில் பழமைவாய்ந்த மரமொன்றில் தோன்றிய அதிசய அம்மன்: படையெடுக்கும் பக்தர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் தெரிவதால் பக்தர்கள் படையெடுத்து வருவதை காண முடிகின்றது.
குறித்த ஆலயத்திலுள்ள எண்பது வருடம் பழமைவாய்ந்த ஆலமரத்தின் விழுதில் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டது போன்று காட்சி அளிப்பதை தொடர்ந்து மக்கள் அங்கு வருவதை காண முடிகிறது
குறித்த இடத்திற்கு வரும் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் பூசைகளும் இடம்பெறுகின்றது நாட்டில் தற்போது அசாதாரன சூழ்நிலையும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதால் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
இதன் காரணமாக மக்கள் மிகுந்த பயத்துடன் குறித்த உருவச்சிலையும் ஆலயத்திலுள்ள அம்பாளையும் வழிபட்டு வருவதைக் காணமுடிகின்றது.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதையடுத்து ஆலயத்தின் பிரதம குரு சத்திய புவேனேஸ்வர சிவாச்சாரியார் விஷேட பூஜையை நடாத்தி வைத்தார்.