நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் நேற்றைய தினம் பதிவான 473 கொவிட்-19 நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

138 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 63 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேரும், பதிவாகியுள்ளனர்.

இன்று காலை வரையான நிலவரப்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தைக் கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 ஆயிரத்து 59 பேர் மினுவாங்கொடை கொத்தணியிலும், 16 ஆயிரத்து 372 பேர் பேலியகொடை, கொத்தணியிலும் பதிவாகியுள்ளனர்.

இந்த இரண்டு கொத்தணிகளிலும் 12 ஆயிரத்து 793 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நாள் வரையில் 22 ஆயிரத்து 501 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

410 நேற்று குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது.

6 ஆயிரத்து 168 பேர் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வடமாகாணத்தில் நேற்றைய தினம் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.