சுயதனிமைப்படுத்தப்பட்ட பெண் திடீர் மரணம்!

சுயதனிமைப்படுத்தப்பட்ட பெண் திடீர் மரணம்!

பொகவந்தலாவை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கெம்பியன் கீழ் பிரிவை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான கந்தையா தெய்வானை ( 69 வயது) என்பவரே இன்று காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகளும் பேரப்பிள்ளையும் கடந்ந 16ஆம் திகதி பத்தமுல்ல பகுதியிலிருந்து வந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே இவர் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு கெஸ்ட்ரிக் வருத்தம் மாத்திரமே இருந்ததாகவும் தோட்ட வைத்தியசாலையில் அதற்கான மருந்து எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் சடலம் பி.சி. ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுத்துவதற்கு மாதிரி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் பி.சி. ஆர் பரிிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த குடியிருப்பு பகுதிக்கு தற்போது தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.