தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பான அறிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் வாரத்தின் திங்கட்கிழமை காலையின் பின்னர் கொரோனா அவதானம் உள்ள பகுதிகளில் முன்னெடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இன்று மாலை அல்லது நாளை காலை நாட்டிற்கு அறிவிக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பின் அந்த நடவடிக்கை எவ்வாறு முன்னெடுப்பது எனவும் அவர் இதன்போது விளக்கமளித்திருந்தார்.

எதிர்வரும் வாரம் முதல் முடிந்தளவில் தேவையான பிரதேசங்களளை மாத்திரம் தனிமைப்படுத்துவதாகவும் அது ஒரு வீதியாகவோ, தொடர்மாடியாகவே அல்லது ஊரின் ஒரு பகுதியாவோ இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் 272 இனங்காணப்பட்டாலும் அவர்கள் உள்ள பகுதிகளை கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.