மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான முழுமையான அதிகாரங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படவிலலை எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டிள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது உயர்கல்வியினை பெற்றுக்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அதற்கு தேவையான வளங்களை இந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் நிதிகள், மத்திய வங்கியின் கண்காணிப்புக்கு உட்பட்டே கொண்டுவரப்படவேண்டும், எனவும், அதற்கான முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவ்வாறு இல்லாது, பெருமளவு நிதி நாட்டுக்கு கொண்டுவரப்படுவது சட்டவிரோதமானதாகும் எனவும், அதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கப் போவதில்லை எனவும் ஆமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.