புகையிரத திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
இன்றும் நாளையும் புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என புகையிரத பொது மேலாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
குறித்த இரண்டு நாட்களும் புகையிரதங்கள் காலையில் 07 மணிக்கு மாத்திரம் கொழும்புக்கு சென்று மீண்டும் மாலை நேரம் தங்கள் இடங்களுக்குத் திரும்பும்.
பிரதான பாதை மற்றும் கடலோர பாதையில் 02 புகையிரதங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும்.
வடக்கு, சிலாபம் மற்றும் களனி பாதையின் ஊடாக ஒரு புகையிரதம் மாத்திரம் சேவையில் ஈடுப்படும்.
ஏனைய பிரதேசங்களில் இயங்கும் புகையிரதங்கள் தொடர்ந்தும் அதே பாதையில் இயங்கும்.
கடந்த வாரம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து புகையிரதங்களும் அடுத்த வாரம் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என்றார்.