2021 நவம்பர் 16 ஆம் திகதிக்குள் கிடைக்க வேண்டும்! ஜனாதிபதியின் விருப்பம் இதுவே

2021 நவம்பர் 16 ஆம் திகதிக்குள் கிடைக்க வேண்டும்! ஜனாதிபதியின் விருப்பம் இதுவே

2021ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதிக்குள் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் டளஸ் அலகப்பெரும கூறியுள்ளார்.

அம்பலாந்தொட்டையில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர்,

2021 நவம்பர் 16 ஆம் திகதிக்குள் இரண்டு ஆண்டுகள் பதவி நிறைவடையும் போது அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விருப்பம் என்றும் அவர் கூறினார்

10 நாட்களில் நாட்டின் முதல் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மக்களுக்கு வழங்கப்படும், இது காற்றாலை புரட்சியின் உச்சமாக இருக்கும் என்றும் கூறினார்.

எல்.என்.ஜி ஆலைக்கான பணிகளும் இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.