புத்துயிர் பெறவுள்ள 'கிராமத்துடன் கலந்துரையாடல்' வேலைத்திட்டம்
'கிராமத்துடன் கலந்துரையாடல்' என்ற வேலைத்திட்டத்தினூடாக பாதீட்டில் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தை மேலும் திறம்பட கிராம மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ , அமைச்சர்கள் மற்றும் அந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' என்ற தொணிப்பொருளில் மாகாண மட்டத்தில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது .
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தென் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.