முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 52 பேர் கைது

முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 52 பேர் கைது

தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளில் பங்கேற்க வேண்டாம் என சில தரப்பினரால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு இணையம் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை (28) 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசங்கள் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையான காலப்பகுதிகளில் குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் மொத்தமாக 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.