திங்கட்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள்- இ.போ.சபை அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்துகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பேருந்து சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வார இறுதி நாட்களில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரம் இயக்கப்படும் தொடருந்து சேவைகளே அடுத்த வாரமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.