சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

இன்று (28) காலை 9 மணி தொடக்கம் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிததுள்ளது.

அதன்படி பத்தரமுல்லை, பெலவத்தை மற்றும் அகுரேகொட ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத் தடை இடம்பெறவுள்ளதாகவும் குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.