22 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

22 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளதோடு அவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை சிறைச்சாலைகளில் மேலும் 31 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து அங்கு தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 12 பேருக்கும் பூஸா சிறைச்சாலையில் 9 பேருக்கும் புதிதாக தொற்றுறுதியாகியுள்ளதோடு இரண்டு காலப்பகுதிக்கு பின்னர் குருவிட்ட சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி காவல்நிலைய உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இரத்தினபுரி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த கொள்ளுபிட்டி காவல்நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளமை பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.