மகளிர் நல ஆரோக்கிய ஆடைகளுக்கு புதிய வரி சேர்க்கப்படவில்லை...!

மகளிர் நல ஆரோக்கிய ஆடைகளுக்கு புதிய வரி சேர்க்கப்படவில்லை...!

மகளிர் நல ஆரோக்கியத்திற்குரிய ஆடைகளுக்காக புதிய வரி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மகளிர் நல ஆரோக்கியத்திற்குரிய ஆடைகளுக்கான இறக்குமதி வரி 3 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன் 15 வீதம் செஸ் வரியாக அறவிடப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.