செட்டிக்குளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

செட்டிக்குளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

வவுனியா – செட்டிக்குளத்தில் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிகுளம் – காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) மாலை தோட்டத்தில் நின்றிருந்த குரங்குகளை விரட்டிச்சென்ற போது,​ தோட்டத்தை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் மோதி, மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

காந்தி நகரைச் சேர்ந்த 37 வயதானவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.